இந்திய நிலக்கரி சுரங்கத்தில் 100 ஆண்டு கால தீ குறித்த படங்களுக்கு விருது

  • 21 செப்டம்பர் 2016

உலகங்கிலும், போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமூகங்களை ஆவணப்படுத்தும் புகைப்படக் கலைஞர்களை அங்கீகரிக்கும், கெட்டி இமேஜஸ் இன்ஸ்டாகிராம் மான்யம் (Getty Images Instagram grant) என்ற அமைப்பு வழங்கும் விருதின் இரண்டாவது ஆண்டில் , ஒரு இந்திய புகைப்பட கலைஞருக்கு இந்த விருதை வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நிலத்திற்கு அடியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதன் இருப்பு தற்போது நிலத்திற்கு மேலே உள்ளது. ஒரு காலத்தில் பரபரப்பாக இங்கு இருந்த வீடுகள், கோவில்கள், பள்ளிகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற இடங்கள் தீ ஜுவாலைகளால் எரிந்து போயின..

உருகுவே நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் ரோட்ரிக்ஸ் மற்றும் எத்தியோப்பியாவை சேர்ந்த கெர்மா பெர்டா என்ற இரண்டு வெற்றியாளர்களோடு இந்தியாவை சேர்ந்த ரோனி சென் இந்த திட்டத்தின் பரிசு தொகையான 10,000 டாலர்களைப் பெறுகிறார்.

கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரி நகரம் என்று அறியப்படும் ஜாரயாவில் அவர் எடுத்த புகைப்படங்களுக்காக சென் இந்த பரிசை வென்றுள்ளார்.

இந்த நிலக்கரி நகரத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நெருப்பு நிலத்திற்கு அடியில் நெருப்பு எரிந்து வருகிறது.

''ஜாரயாவின் நிலத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தீ எரிந்து வருகிறது. இங்கு வசிக்கும் மக்கள் இதை அவர்கள் பிறந்தது முதல் பார்த்து வருகிறார்கள். அதனால் இது குறித்து அவர்கள் முழுமையாக அறிந்துள்ளார்கள். மற்றும் இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும்,'' என்கிறார் அவர்.

''இங்கு , ஒரு காலத்தில் மிக பரபரப்பான வாழ்க்கையோடு காணப்பட்ட பல கிராமங்கள் இங்கு தற்போது இல்லை. அந்த கிராமங்கள் மறைந்துவிட்டன. இங்கிருந்த மக்களில் சிலர் நல்ல வேலைவாய்ப்புகளை தேடி மற்ற நகரங்களுக்கு மாறி சென்றுவிட்டனர். இங்கு ஒரு பெரிய அளவிலான மக்கள் கூட்டத்துக்கு, ஜாரியாதான் சொந்த ஊர், அவர்கள் நிலக்கரி சுரங்கங்கள் வெடிக்கும் போது அங்கிருந்து நகர்கின்றனர்,'' என்றார்.

அவர்கள் பொருளாதாரத்திற்கு பெரிதும் நிலக்கரி தொழிலைத்தான் நம்பியுள்ளனர். அவர்களிடம் வேறு எந்த விதமான திறன்களும் இல்லை. அதனால் அவர்கள் நெருப்பு எரிந்தாலும் மற்றும் நிலம் சரிந்தாலும், அவர்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் நிலக்கரி சுரங்கத்தை ஒட்டித்தான் வசித்து வருவார்கள், '' என்றார் சென்.

படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஜாரயாவில் நிலத்திற்கு அடியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption ஜாரயாவின் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தின் உடைந்த கோவில் சுவர். நிலத்தடியில் நெருப்பு இருப்பதாலும் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதால், அருகில் உள்ள கிராமங்களில் பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption ஜாரயா ஒரு காலத்தில் பசுமையான காடாக இருந்தது
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் வேலையில் இருந்து திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஜாரயாவின் சுரங்கத்தில் நிலக்கரி தோண்டி எடுப்பவர்களாக வேலை செய்கிறார்கள்.
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption நிலக்கரி சுரங்க அதிகாரிகள் ஜாரயாவில் பயன்பாட்டிற்கு உகந்த நிலக்கரியை எரிந்து கொண்டிருக்கும் சுரங்கம் ஒன்றிலிருந்து தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption ஜாரயாவின் சுரங்கங்களில் வேலை செய்யும் ஒரு நிலக்கரி தொழிலாளி.
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption ஜாரயாவின் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி. கிட்டத்தட்ட ஐந்து லாரி வண்டிகளில் நிலக்கரியை நிரப்பினால் இரண்டு டாலர் இவருக்கு கிடைக்கும்
படத்தின் காப்புரிமை ரோனி சென்
Image caption நிலக்கரித் துறை அதிகாரிகள் உள்ளே வருவதற்கு முன்பு, அதிகாலையில், நிலக்கரியை தோண்டி எடுக்கும் தொழிலாளர்கள் வேலை செய்கிறாரகள்.

'இந்த மக்களைப் பற்றிய எனது கவலையை மேலும் கூடுதலான மக்களிடம் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். ஏனெனில், ஜாரியாவின் கதை, இந்தியாவின் வரையறை உட்பட்ட மற்றும் இந்த நாட்டுடன் முடிந்து போகும் கதை அல்ல, '' என்றார் சென்.

''ஜாரயாவின் கதை இங்கு பேசுபொருளானது ஒரு தற்செயலான ஒன்று தான். இது ஒரு உலகெங்கும் நன்றாகத் தெரியக்கூடிய, ஒரு பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் ஆழ்ந்த அரசியல் பிரச்னைதான். இது ஒரு உரையாடலை தொடங்கி வைத்து, என்ன வகையான சாத்தியக்கூறான எதிர்காலத்தை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதை ஓரளவு காட்டும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் சென்.