பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பத்து வருடங்களுக்கும் மேலாக உள்ள நதிநீர் ஒப்பந்தம் குறித்து மறு ஆய்வு செய்ய தலைநகர் டெல்லியில் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"சிந்து நதி நீர் ஒப்பந்தம்" 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது; அது ஆறு முக்கிய நதிகளின் நீர், இரு நாடுகளுக்கும் இடையே எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை நிர்ணயிக்கிறது.

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், ராணுவ முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்த அளவில் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் இந்த மறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு தீவிரவாத அமைப்பின் மீது இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது; ஆனால் பாகிஸ்தான் தான் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்