பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கென தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Image caption தீபாவளி ஊக்கத்தொகையை அறிவித்த ஜெயலலிதா

இதன்படி, தமிழக அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஊக்கத்தொகைப் பெறத் தகுதியானவர்கள் குறைந்தபட்சம், 8400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் பெறுவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்தது.

தொடர்புடைய தலைப்புகள்