காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு - இந்தியா

இந்தியா தனது படைவீரர் ஒருவர் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியின் பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான ராணுவத்தால் பிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

Image caption காஷ்மீர் கட்டுப்பாடு கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் சிறைப் பிடிப்பு ( கோப்புப்படம்)

பாகிஸ்தான நிலப்பரப்பில் தீவிரவாத இலக்குகள் மீது பல தொடர்ச்சியான தாக்குதல்களைத் தான் தொடுத்ததாக இந்திய ராணுவம் கூறி ஒரு நாளைக்குப் பின்னர் இந்த சம்பவம் வருகிறது.

அத்தாக்குதலில் தரைப்படையினர் பயன்படுத்தப்பட்டனர் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

பிடிபட்ட இந்த சிப்பாய் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், அவர் கவனக்குறைவாக கட்டுப்பாட்டு கோட்டைக் கடந்துவிட்டார் என்றும் இந்தியா கூறுகிறது.

இந்த சிப்பாயைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தவில்லை . எனவே இவர் வெளியே சொல்லப்படாமல் திரும்ப அனுப்பப்படலாம் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.

இரு தரப்புகளுக்கும் இடையே காஷ்மீர் தொடர்பாக கடந்த சில வாரங்களாக பதற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் இரு தரப்புகளுமே இந்த மிகச் சமீபத்திய சம்பவத்தைப் பெரிது படுத்தாதது போல் தோன்றுவதாக டெல்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.