வீடுகளை காலி செய்யும் இந்தியா - பாக்., எல்லைகளில் வசிக்கும் கிராமவாசிகள்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வசிக்கும் கிராமவாசிகள், இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகும் என்பதால் தங்கள் வீடுகளைவிட்டு உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இவர்களை போன்று பாகிஸ்தானிலும் எல்லையோரம் வசிக்கும் கிராமவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

வியாழன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ,பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்தியா அறிவித்ததை அடுத்து, இந்த இடம்பெயர்தல் நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது படைவீரர் ஒருவர் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் கவனக்குறைவாக எல்லை தாண்டியதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறைப்படுத்தி வைத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

12 தினங்களுக்குமுன், காஷ்மீரில் இருந்த இந்திய ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய மிகமோசமான தாக்குதலை தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்