ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

தீவிரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வாகனத்தில் பட்டு வெடித்து 11 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தோடு கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தென் பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Image caption ஆப்கன் விபத்து (கோப்புப்படம்)

அரசப் படைக்கும் தலிபான் இயக்கத்திற்கும் இடையில் பல வாரங்களாக கடும் சண்டை நடந்து வரும் மாகாண தலைநகரான லாஷ்கார் காவிற்கு அருகில் இது நடைபெற்றிருக்கிறது.

இரண்டு குழுந்தைகள், நான்கு பெண்கள், ஐந்து ஆண்கள் இதில் இறந்துள்ளதாக ஹால்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்