வாரணாசியில் பெரியளவில் நடந்த 'தூய்மை இந்தியா' பிரச்சாரம்

மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் துப்புரவு பிரச்சாரத்தின் மையத்தில் இந்திய நகரமான வாரணாசி உள்ளது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குமுன் 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கங்கை நதிக்கு செல்லும் 84 படித்துறைகளை தன்னார்வலர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

வாரணாசி இந்துக்களின் புனித நகரமாகும்.

ஆனால், அதன் ஆன்மீக தூய்மையின் அளவுக்கு அந்நகரின் பொளதிகத் தூய்மை இல்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமர் மோதி

தாஜ் மஹால் மற்றும் மும்பையின் மிகப்பெரிய விக்டோரியா காலத்து ரயில் முனையம் உட்பட மற்ற பிரதான இடங்களில் துப்புரவு பணி நடந்து வருகிறது.

இந்த தேசிய அளவிலான துப்புரவு இயக்கத்தின் வெற்றி எல்லா இடத்திலும் வெற்றிகரமாக இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கழிப்பிடங்களை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பரவலான தோல்வி ஒரு பிரச்சினையாக உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்