ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்

படத்தின் காப்புரிமை Getty Images

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டுவருவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல்நலத்தை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் முன்பு அறிவிக்கப்பட்ட சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் உடல் நலம் குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், அவருடைய நோய் தொற்றுக்கு பொருத்தமான ஆன்டிபயாடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், மூச்சுவிட உதவுகின்ற கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்