இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் மீண்டும் மோதல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிறுவனின் இறுதி சடங்கின் போது

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இந்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதி சடங்கின் போது படையினர் பெல்லட் குண்டுகளையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசியதை தொடர்ந்து இந்த மோதல் சம்பவம் வெடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உயிரிழந்த சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களை தடுத்த நிறுத்த போலிசார் முயற்சித்த போது வன்முறை வெடித்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய பெல்லட் குண்டு தாக்குதலை தொடர்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தார்

கடந்த ஜூலை மாதம் எழுந்த பதற்ற நிலையை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் இதுவரை 90 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் இளம் போராட்டக்காரர்கள்.

தொடர்புடைய தலைப்புகள்