தமிழக ஆளுநரைச் சந்தித்தார் வைகோ

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுர் வித்யாசாகர் ராவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினார். நட்பின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக வைகோ தெரிவித்தார்.

Image caption நட்பும் சந்திப்பும்

ஆளுநர் மாளிகைக்குச் சென்று வித்யாசாகர் ராவைச் சந்தித்த வைகோ, பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த சந்திப்பில் அரசியல் ஏதும் கிடையாது என்றும், வித்யாசாகர் ராவ் இணையமைச்சராக இருந்த போதிலிருந்தே தனக்கு அவருடன் நட்பு இருந்ததாகவும் கூறினார்.

இந்த சந்திப்பு நாற்பது நிமிடங்கள் நீடித்தது.

இதற்கு முன்பாக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்ற வைகோ, மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீல், அங்கிருந்த அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தாகக் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்