ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை அறிக்கை

உடல்நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் அவரது உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Image caption தொடரும் சிகிச்சையில்

அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள சுவாசக் கருவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், உரிய மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் நுரையீரலில் உள்ள அடைப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட பிற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுவருவதாகவும் அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்