ஜெயலலிதாவுக்கு தொடரும் மருத்துவ சிகிச்சை

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்கிறது.

Image caption பல்வேறு அரசியல் தலைவர்கள் அப்போலோ மருத்துவமனை சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்து வருகின்றனர்

தமிழக முதலமைச்சர் தீவிர மருத்துவ கண்காணிப்பு மருத்துவர்களாலும், பிற நிபுணர் குழுவிலுள்ள மருத்துவ ஆலோசகர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

தேவையான சுவாசிக்க உதவும் கருவிகள், ஆன்டிபயோடிக் மருந்துகள், ஊட்டசத்துகள், உடல்நல ஆதரவு சிகிச்சைமுறைகள் மற்றும் பிசியொதெரபி அனைத்தும் அவருக்கு வழங்கப்படுகின்றன என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரம் கூறியிருக்கிறது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியில் நிறுவனத்தின் நுரையீரல் சார் மருத்துவ துறையின் பேராசிரியர் மருத்துவர் கில்னானி, அப்போலோ மருத்துவமனைக்கு ஞாயிறு ( அக் 9) மற்றும் இன்று ( அக் 10) வந்து சென்றுள்ளார்.

தமிழக முதலமைச்சரை பரிசோதனை செய்த அவர், அப்போலோ நிபுணர் குழுவோடு கலந்துரையாடல் மேற்கொண்டதோடு, தற்போது முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைக்கு இசைவு தெரிவித்திருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்