அருண்ஜேட்லி - அமித்ஷா சென்னையில் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமித் ஷா - அருண்ஜேட்லி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து கேட்டறிவதற்காக, அவர் சேர்க்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

தில்லியிலிருந்து இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்த அவர்கள், பிற்பகல் இரண்டே கால் மணியளவில் அப்போலோ மருத்துவமனையை வந்தடைந்தனர்.

அங்கு 20 நிமிடங்கள் முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்தறிந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களது கருத்தைப் பெற செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில், அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்காமலேயே சென்றுவிட்டனர்.

இதற்குப் பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அருண் ஜேட்லி, ``தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை அப்போலோ மேருத்துவமனைக்கு விஜயம் செய்தேன். முதல்வர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.