கால் சென்டர் மோசடியை விசாரிக்க எஃப்.பி.ஐ அதிகாரிகள் இந்தியா வருகை

ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை சட்டவிரோதமாக ஏமாற்றி அதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை சுருட்டிய மிகப்பெரிய கால் சென்டர் மோசடி ஒன்றை விசாரிப்பதற்காக மேற்கு இந்திய நகரமான தானேவுக்கு எஃப்.பி.ஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கடந்த வாரம், இந்த மோசடி குறித்து போலிசார் நடத்திய தொடர் சோதனைகளில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே இதனை போலிசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் தாங்கள் பணியாற்றுவதாக மக்களை ஏமாற்றியதாகவும், முறையாக வரி செலுத்தவில்லை அதனால் சிறைக்குத் தள்ளப்படுவீர்கள் என மிரட்டி அவர்களுடைய வங்கிக் கணக்குகளை பெற்றதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் என கருதப்படும் 24 வயதான நபர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்