இந்தியாவின் ராக்கெட் நாயகன் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள்: புகைப்படத் தொகுப்பு

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கியவர் எனக் கருதப்படுபவருமான மறைந்த அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று. அதையொட்டி, அவரைப் பற்றிய சிறப்பு புகைப்படத் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவின் அணுத்திட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நாட்டின் அதியுயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2002ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட அவர் ஐந்தாண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது தொடர்பில் இளைஞர்களிடம் உரையாற்றி வந்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன் வாழ்வின் இறுதிவரை அப்துல் கலாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குழந்தைகள் மீது அளப்பரிய அன்பை செலுத்தியவர் அப்துல் கலாம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பல லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அப்துல் கலாம், 'மக்களின் குடியரசுத் தலைவர்' என்றும், இளைஞர்களின் உற்ற நண்பர் என்றும் பரவலாக பாராட்டப்பட்டார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2005 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் சுவிஸ் பயணம் மேற்கொண்டிருந்த போது, அந்நாட்டு அதிபர் சாமுவெல் ஷ்மிட்டை புகைப்படம் எடுத்த போது
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஷில்லாங் நகரில் இந்திய மேலாண்மைக் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்