பயங்கரவாதத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒன்று சேர வேண்டும்: பிரதமர் மோதி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தலைவர்கள் அனைவரும் பாரம்பரிய நேரு மேலாடைகளை அணிந்து கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம், பயங்கரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கேட்டு கொண்டுள்ளார்.

பயங்கரவாதம், வளமைக்கான "மிக தீவிர நேரடி அச்சுறுத்தல்" என மோதி விவரித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய மோதி, இந்தியாவின் அண்டை நாடுதான் "பயங்கரவாதத்தின் அடிதளம்" என்று கூறி மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார்.

இந்திய ராணுவ முகாமின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக இந்தியா, பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியுள்ளது ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.