ஒதிஷா தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 19 பேர் பலி

  • 17 அக்டோபர் 2016

ஒதிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 19 நோயாளிகள் இறந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SANTHEEP SAHU

டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு, மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளதை மருத்துவமனை அதிகாரிகள் அறிந்துள்ளனர்.

தீக்காயம் அடைந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் 14 பேர் இறந்தனர்.

மற்ற எட்டு நோயாளிகள் மருத்துவமனையில் சேர்த்த பின் இறந்தனர் என கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SANTHEEP SAHU

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கணக்கெடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SANTHEEP SAHU
Image caption தீ விபத்து நேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு வெளியில் மக்கள்

விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் தீயணைப்பு படையினர் குவிந்துள்ளனர்.