ஒதிஷா தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 19 பேர் பலி

  • 18 அக்டோபர் 2016

இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EURPOEAN PHOTOPRESS AGENCY
Image caption திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்

எஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டஜன் கணக்கானவர்கள் பிற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 120 தீயணைப்புப் படையினர் தீ பரவலைச் சமாளித்த பிறகு, அது கட்டுப்பாட்டில் வந்தது. பிரதமர் நரேந்திர மோதி இந்த தீ விபத்தால் கடும் துயர் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகப்படுகிறோம்,'' என்று பினோய் பெஹெர என்ற உள்ளூர் தீயணைப்பு படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இணையதளம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஒதிஷாவில் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்து தன்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

''இந்த தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியும் , '' என்று புவனேஸ்வர் காவல் துறை ஆணையர் யோகேஷ் குஹுரேய்னா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 106 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக வந்த செய்திகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று கூறின. ஆணையர் குஹுரேய்னா காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் இருந்தனர் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

படத்தின் காப்புரிமை EURPOEAN PHOTOPRESS AGENCY
Image caption தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் நுழைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் கட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன

சில நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், ஜன்னல்கள் வழியாகக் கட்டிடத்தின் வெளியே குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

''ஒதிஷாவில் மருத்துவமனையில், தீ விபத்தால் நேரிட்ட உயிரிழப்புகள் என்னைக் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சோகம் மனதை மரத்துப் போகச் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பற்றிய எனது எண்ணங்கள் அவர்களுக்குத் துணை நிற்கும், '' என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி.

2011ல் கொல்கொத்தாவின் கிழக்கு நகரத்தில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 89 பேர் இறந்தனர்.