சிவகாசி பட்டாசு விபத்து: 8 பேர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிவகாசி அருகே பட்டாசுகள் வெடித்து விபத்து: 8 பேர் பலி (காணொளி)

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறவழிச் சாலையில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து பட்டாசுகள் வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக இன்று வியாழக்கிழமை பிற்பகல் வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது, பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தன.

பட்டாசு ஏற்றப்பட்ட வாகனம் தீப் பிடித்து எரிந்தது. அருகில் இருந்த வாகனங்களும் தீப்பிடித்தன. பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதையடுத்து, பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர்.

இந்த விபத்தில், ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சாம்பலாகிவிட்டன.

இந்த விபத்து தொடர்பாக, கிடங்கு உரிமையாளர் செண்பகராமன், கிடங்கு உரிமம் பெற்றுள்ள ஆனந்தராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்