முதல்வர் உடல் நலன் குறித்து வதந்தி பரப்பியதாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும்: ஆம்னெஸ்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வதந்திகளை நிறுத்த இது வழியல்ல: ஆம்னெஸ்டி

பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதியதாக குற்றம்சாட்டப்பட்டு, இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும், 8 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் ஆம்னெஸ்டி சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் தமிழக ஆளும் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதையும் ஆம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் குறித்த துல்லியமான தகவல்களை சரியான நேரத்தில் அளிப்பதன் மூலமே வதந்திகளை நிறுத்த முடியும் எனவும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதன் மூலம் அதைச் செய்ய முடியாது எனவும் ஆம்னெஸ்டி கூறியிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்