தில்லியில் மாசு அளவை குறைக்க புதிய செயலி அறிமுகம்

  • 22 அக்டோபர் 2016

உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றான இந்திய தலைநகர் தில்லியில், தற்போது காற்று மாசடைவதைத் தடுக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை @HAWA BADLO
Image caption தில்லியில் மாசு அளவை குறைக்க புதிய செயலி அறிமுகம்

அது ஒரு ஸ்மார்ட்ஃபோன் செயலி, அதில் பொதுமக்கள், கட்டட பணிகள் அல்லது சாலையில் உள்ள புழுதிகள், மற்றும் எரிந்து கொண்டிருக்கும் சருகுகள் மற்றும் பூங்காக்களில் உள்ள குப்பைகள் ஆகியவற்றை குறித்து புகார் தெரிவிக்கலாம்.

படத்தின் காப்புரிமை @HAWA BADLO
Image caption கட்டட பணிகள் அல்லது சாலையில் உள்ள புழுதிகள், மற்றும் எரிந்து கொண்டிருக்கும் சருகுகள் மற்றும் பூங்காக்களில் உள்ள குப்பைகள் ஆகியவற்றை குறித்து புகார் தெரிவிக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று இந்த செயலியை வெளியிட்டுள்ளது.

மாசுக்களை ஏற்படுத்தும் விஷயங்களையும் புகைப்படம் எடுத்து அனுப்பும் வசதியையும் இந்த செயலி கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை @HAWA BADLO
Image caption புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலையும் அது தெரிவிக்கிறது.

சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த புகார்கள் சேரும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலையும் அது தெரிவிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்