இந்தியா: ஆந்திரா - ஒடிஷா எல்லைப்பகுதியில் 23 மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொலை

  • 24 அக்டோபர் 2016

கிழக்கு இந்திய மாநிலமான ஒடிஷாவில் குறைந்தது 23 மாவோயிஸ்ட் போராளிகளை கொன்றுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அதில், ஆறு பெண் போராளிகளும் அடங்குவார்கள். மேலும், 23 உடல்களை கைப்பற்றியுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஆந்திரா உடனான எல்லைப்பகுதி ஒட்டிய வனப்பகுதியில் பதுங்கியிருந்து போராளிகள் மீது திடீர் தாக்குதலை தொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்களால் நீண்ட கால கிளர்ச்சியை அந்த பகுதி சந்தித்து வருகிறது.

இந்திய அரசு நாட்டின் வளங்களை சுரண்டி ஏழை மற்றும் நிலம் அல்லாதோருக்கு கேடு விளைவித்து வருவதாக மாவோயிஸ்ட்டுகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்