திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கருணாநிதி (கோப்புப் படம்)

கருணாநிதி உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக்கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக, அக்கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அவரைப் பார்க்க பார்வையாளர்கள் வரவேண்டாமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்