தமிழக சாலைப் பணிகள்: வெள்ளையறிக்கை கோரிய திமுக, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக சாலைப் பணிகள்: வெள்ளையறிக்கை கோரிய திமுக, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழகத்தில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளின் உண்மை நிலை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

இது குறித்து முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சரும், திமுக தலைவருமான துரைமுருகனிடம் கேட்டபோது, ''தமிழகத்தில் பல இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்றதாக அறிக்கைகள் உள்ளன. மக்களின் நலன் கருதி அந்த அறிக்கையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிந்து விட்டனவா? செயல்படுத்தப்பட்ட பணிகளின் நிலை என்ன? சாலைகளின் தரம் என்ன என்பது குறித்த விளக்க அறிக்கையாக அந்த வெள்ளை அறிக்கை தரப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்,'' என்றார்.

திமுக ஆட்சியில் போது போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து கேட்டபோது, ''சாலைகளின் தரத்தை உறுதி செய்ய நெடுஞ்சாலை துறையில் சாலைகளின் தரத்தைச் சரிபார்க்கும் சோதனை பிரிவு செயல்பட்டது. தற்போது அந்தப் பிரிவு செயல்படுகிறதா இல்லையா என்பது தெரியாது. நான் அமைச்சராக இருந்த போது, சாலையின் மாதிரிகளை வெட்டிக் கொடுத்து சோதனை செய்துள்ளேன். சாலையின் தரம் குறைந்ததை அடுத்து ஒரு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளேன்,'' என்றார். அவர் மேலும் டெண்டர் அறிவிக்கப்படும் பொது, அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று குற்றம்சாட்டினார்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் பணிகள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நோக்கத்தில் தான் திமுக, தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கோரியுள்ளது என்றார்.