தமிழகத்தில் சேவல் சண்டை விளையாட்டிற்கு தடை நீங்குமா? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சேவல் சண்டைக்குத் தடைதான் - ஆனால் சேவல் விற்பனை தொடர்கிறது (காணொளி)

சேவல் சண்டை விளையாட்டு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் கூட, தமிழ்நாட்டில் சண்டை சேவல் விற்பனை என்பது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி, சட்டவிரோதமாக இன்னும் சில இடங்களில் சேவல் சண்டை, வெளிப்படையாக இல்லாமல் நடப்பது இந்த விற்பனைக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சேவல் சண்டைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஆனால் தலைநகர் சென்னையிலேயே, சண்டை சேவலுக்கு சந்தைகள் உள்ளன. தடையின் காரணமாக இந்த சந்தைகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலைகள் வெளியாகின்றன. அது குறித்து எமது சென்னை செய்தியாளர் ஜெயகுமார் தொகுத்து வழங்கும் காணொளி.

தொடர்புடைய தலைப்புகள்