புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பின் போட்டியிடும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு

வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடக்கவுள்ள நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் புதுவையின் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

புதுவையில் உள்ள பல கட்சிகளிடமிருந்தும்முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி முயற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்கள்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தல்களை மக்கள் நலக்கூட்டணி போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு எடுத்து விட்ட நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுவை இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்புடைய தலைப்புகள்