காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு: 200 பள்ளிகளை மூட உத்தரவு

பாகிஸ்தானுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் சுமார் 200 பள்ளிகளை மூடஅதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காஷ்மீரில் பள்ளிகள் கொளுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று "ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்" என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், நடைமுறையில் உள்ள எல்லைப் பகுதியை கடந்து இந்தியா நடத்திய ஷெல் குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

பிரிவினைவாத அமைப்புகளால் முன்னடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தத்தால் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள பள்ளிகளின் வகுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

செப்டம்பர் மாதம் இந்திய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து இருதரப்பிலும் பதற்றம் அதிகரித்தது.

தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சார்ந்த தீவிரவாதிகள் மீது இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.