இந்திய வரலாற்றில் அதிகளவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றுதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் இருபது மில்லியனிற்கும் அதிகமான மாண்ட்ராக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் மருந்தான "மெத்தாக்குவாலோன்" மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை தொடர்பாக, இந்திப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படவிருந்தன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆப்ரிக்கா மற்றும் ஆசியா பகுதிகளில் நடத்தப்படும் இரவுநேர ஆட்ட நிகழ்ச்சிகளில் இந்த போதைப் பொருள் பிரபலமானதாகக் கருதப்படுகிறது.