தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக ஆதிக்கமா ?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக ஆதிக்கமா ?

  • 3 நவம்பர் 2016

தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனல்களில் நடக்கும் அரசியல் விவாதங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகள், மற்ற கட்சி பிரதிநிதிகளைக் கூச்சல் போட்டு , விவாதத்தில் மாற்றுக் கருத்துக்கள் வெளிவருவதைத் தடுக்கிறார்கள் என்று திமுக, இ.கம்யூ,விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிட கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை சென்னையில் நட்த்தின. இந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்கிறதா, தனியார் தொலைக்காட்சி சேனல்களில் அரசியல் விவாதங்கள் தொழில்சார் தன்மையுடன் நடக்கின்றனவா என்று மூத்த தொலைக்காட்சி ஊடகவியலாளரும், பல இந்திய தொலைக்காட்சிகளில் ஆசிரியராக இருந்தவருமான ஸ்ரீநீவாசன் அவர்களை பிபிசி தமிழோசையின் மணிவண்ணன் கேட்டார்.