இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் பெல்லட் குண்டு தாக்குதலில் 12 பேர் காயம்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், இறுதி அஞ்சலி கூட்டம் ஒன்றில் போலிசார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரு தினங்களுக்குமுன் பாதுகாப்பு படையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு 16 வயது சிறுவன் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தார்.

அதே சமயம், பிரிவினைவாத ஆதரவு போராட்டகாரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி எறிந்தனர்.

இரு தினங்களுக்குமுன் பாதுகாப்பு படையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு 16 வயது சிறுவன் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தார்.

அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது இந்த மோதல் வெடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல்; 12 பேர் காயம்

பாதுகாப்பு படையினரின் காவலில் இருந்த போது சிறுவன் சித்ரவதைக்கு உள்ளானதாக அந்த சிறுவனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர் தானாகவே விஷத்தை உட்கொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் பிரபல தீவரவாத தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்குபின், கடந்த நான்கு மாதங்களாக அங்கு அமைதியின்மை பரவி உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்