புதிய ரூபாய் நோட்டுக்கள் பெற வங்கிகளுக்கு முன்னால் மீண்டும் நீண்ட வரிசை

இந்தியாவில் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி, புதிய ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக வங்கிகளுக்கு முன்னல் மீண்டும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

வாடிக்கையாளர்களிடம் பணம் ரொக்கமாக இல்லாததால், பல கடைகளில் வர்த்தகம் நடைபெறாமல் இருப்பதாக கொல்கத்தாவிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

பொருட்ளை வாங்கியோரும், சில்லறை இல்லாமல் இருக்கும் கடைக்காரர்களிடம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துவிட முயல்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூபாய் 2000 நோட்டு

வியாழக்கிழமை வங்கிகளின் முன்னிருந்த வரிசை ஒழுங்காக இருந்ததாகவும், வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுக்கள் தீர்ந்து விட்டதும் கோபம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் ஒரு முயற்சியாக, எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீரென 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என்று செவ்வாய்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

கறுப்பு பணத்தால் இந்திய அரசின் வரி வருவாய் பாதிக்கப்படுவதோடு, விலைவாசியும் உயர்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்