பண நோட்டு நெருக்கடி தொடர்பாக பிரதமர் மோதி அவசர கூட்டம்

  • 14 நவம்பர் 2016

இந்தியாவில் அதிக மதிப்பை கொண்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறமோதி தலைமையிலான மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பண நெருக்கடி நிலையை சமாளிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி கருவூல அதிகாரிகளுடன் அவசரக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பண நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கருவூல அதிகாரிகளுடன் அவசர கூட்டங்களை நடத்தியுள்ளார்.

வங்கிகளிலிருந்து பொதுமக்கள் எடுக்கும் பணத்தின் அளவை தற்போது அரசாங்கம் அதிகரித்துள்ளது. மேலும், நவம்பர் 24 ஆம் தேதி வரை அத்தியவசிய சேவை கட்டணம், வரிகள், எரிபொருள் மற்றும் பயணங்களுக்கு பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

கடந்த வாரத்திலிருந்து, மில்லியன் கணக்கான இந்தியர்கள் மணிக்கணக்கில், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களுக்கு முன்னால் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கும் மற்றும் செலுத்துவதற்கும் நீண்ட வரிசைகளில் நின்று வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 45 பில்லியன் டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தற்போது வரை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்