சத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

இந்தியாவின் மத்திய பகுதியான சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் வலுவிடமான ஒரு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டுகள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இதே சூழ்நிலைகளில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு பிறகு நடைபெற்ற சண்டையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மத்திய பகுதிகளில் தீவிரமாக செயல்படும் நக்ஸலைட்டுகள் என்றும் அறியப்படும் மாவோயிஸ்டுகள் ஏழைகளுக்காகவும், நிலமில்லாதவர்களுக்காகவும் போராடி வருவதாக கூறிக் கொள்கின்றனர்.

இந்த ஆண்டு நக்ஸலைட்டுகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைப்பரிவுகள் தெரிவித்திருக்கின்றன.

ஆனால், நக்ஸலைட்டுகள் என்ற பெயரில் சாதாரண பழங்குடியின மக்களும் இதில் இலக்கு வைக்கப்படுவதாக சத்தீஸ்கர் மாநில எதிர்க்கட்சி அரசியில்வாதிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்