இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பையின் 10 இடங்களில் சோதனை

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பை மாநகரின் 10 இடங்களில் பயங்கரவாத தடுப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

ஷாகிர் நாயக்

மத வெறுப்புணர்வை தூண்டியதாக ஷாகிர் நாயக் மீது இந்திய அரசு வழக்கு பதிவு செய்த சில மணி நேரங்களில் இந்த அதிரடி சோதனைகள் நடைபெற்றுள்ளன.

செவ்வாய்க்கிழமை இஸ்லாமிய ஆய்வு பவுண்டேஷன் என்ற ஷாகிர் நாயக்கின் நிறுவனத்தை இந்திய அரசு தடை செய்திருக்கிறது.

இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்.

அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.