போர்நிறுத்தம் அறிவித்த பிறகும் ஏமனில் தொடரும் மோதல்கள்

ஹூதி கிளர்ச்சியளர்களுக்கு எதிராக போரிடுகின்ற ஏமன் அரசுக்கு ஆதரவளிக்கும் சௌதி தலைமையிலான கூட்டணி படை 48 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால் இந்த போர்நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு மணிநேரத்திற்கு பின்னரும் மோதல்கள் தொடர்ந்ததாக தகவல்கள் வந்துள்ளன.

கிளர்ச்சியாளர்கள் இந்த போர்நிறுத்தத்தை கடைபிடித்தால், இது புதுப்பிக்கப்படும் என்று முன்னதாக சௌதி தெரிவித்திருந்தது.

இந்த போர்நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக ஹூதி கிளர்ச்சியாளர்களும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

ஏமனில் 18 மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச ராஜீய அழுத்தங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்