கான்பூர் அருகே ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி

Image caption ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டதில் , குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேர் காயம் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தூரிலிருந்து பாட்னாவுக்கு சென்று கொண்டிருந்த இந்த ரெயில், கான்பூருக்கு அருகே உள்ள புக்ரயான் என்ற ரெயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, அதன் 14 பெட்டிகள் தடம் புரண்டன என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிக மோசமாக சேதமடைந்த இரு பெட்டிகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், மீட்ப்பணியினர் மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், எனினும், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று பிபிசியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இந்த ரெயில் பாதை ஒற்றைத்தடம் என்பதால், இந்தப் பாதையில் ரெயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

விபத்து குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வருத்தம் தெரிவித்துள்ளார்.