இன்று முதல் ''100 பெண்கள்'' தொடர் மீண்டும் ஆரம்பம்

பிபிசியின் 100 பெண்கள் தொடர் நவம்பர் 21, திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

Image caption ''100 பெண்கள்''
Image caption ''100 பெண்கள்''

அடுத்த மூன்று வாரங்களுக்கு, பெண்கள் சந்தித்துள்ள முன்மாதிரி எதிர்ப்பு தருணங்களையும், கறுப்பு பெண்ணிய ஆராய்ச்சி, இசை, விளையாட்டு மற்றும் அரசியல் துறைகளில் உள்ள புகழ் பெற்ற பெண்களுடன் உரையாடல் என சுவையான பல அம்சங்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அதில், நீங்கள் இதுவரையில் கேள்விப்பட்டிராத, வியத்தகு அனுபவங்களைப் பெற்ற பல பெண்களின் உணர்வுகளையும் உங்களுக்கு வழங்கவுள்ளோம்.

100 பெண்கள் தொடர் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய 100 பெண்கள் பட்டியலை பிபிசி 100 பெண்கள் தொடர் வெளியிடுகிறது.

உலகெங்கும் உள்ள பல பெண்களின் சாதனைகள், அனுபவங்கள் மற்றும் சிறப்புகள் குறித்து பல ஆவணப்படங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் நேர்காணல்களை நாங்கள் உருவாக்குகிறோம்.

Image caption திம்மக்கா

பிபிசி இதனை செய்வதற்கு காரணம் என்ன?

பிபிசி செய்தி சேவை ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிபிசி பெண் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 100 பெண்கள் தொடர் ஒவ்வொரு வருடமும் உருவாக்கப்படுகிறது.

நாங்கள் தொடர்ந்து கேட்பது இவை தான்:-

  • நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 21-ஆம் நூற்றாண்டில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
  • அரசியல் மற்றும் வணிகத்தில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்களா? அல்லது இத்துறைகளில், பெண்கள் சாதிப்பதற்கு உலக அளவில் ஒரு கண்ணாடி தடுப்பு கூரை உள்ளதா?
  • பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய ஆபத்துக்கள் எவை என்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு உள்ள மிகப் பெரிய வாய்ப்புகள் என்ன?
  • மேலும், முக்கியமான ஊடகங்களில் பெண்களை தவறாக வெளிப்படுத்துகிறோமா? அவர்களின் கதைகளை, அனுபவங்களை நாங்கள் சரியான முறையில் பிரதிபலிக்கிறோமா?

இத்தொடர் குறித்த உங்களின் கருத்துக்கள் , பார்வை மற்றும் ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

இத்தொடர் குறித்த பதிவுகளை காணவும் ,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் எங்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் யூ-டியூபில் வாய்ப்புக்கள் உள்ளன.

#100women என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி உங்களுக்கு மிகவும் விருப்பமான பதிவுகள் மற்றும் உங்களின் சொந்த அனுபவங்கள்/ கட்டுரைகளை பகிரலாம்.

Image caption ''100 பெண்கள்'' தொடர்

நான்காவது வருடமாக வெளிவரும் இந்த 100 பெண்கள் தொடர், வழக்கத்தை விட இம்முறை இன்னமும் பெரிய அளவில் வெளிவரவுள்ளது.

பாடகர், பாடலாசியர் மற்றும் இசை தயாரிப்பாளரான அலிசியா கீஸ், அமெரிக்காவில் உள்ள இனங்கள் குறித்தும், டிரம்ப் அதிபராவதற்கு முன்பும், பின்பும் உள்ள சூழல் குறித்தும், பெண்ணியம், ஒப்பனை, புகழ், எதிர்ப்பு, மகன்கள் வளர்ப்பு என பல அம்சங்கள் குறித்து நம்முடன் உரையாற்றவுள்ளார். இவரைப் போலவே இன்னமும் பல பிரபலங்கள், நீங்கள் அறிந்திராத பல பெண்களின் கதைகள் மற்றும் அனுபவங்கள் இம்முறை இடம்பெறவுள்ளன.

படத்தின் காப்புரிமை Theo Wargo
Image caption அலிசியா கீஸ்

இணையதளத்தில் பெண்களின் பங்களிப்பு

பெண்களுக்கான இடத்தையும், உரிய அங்கீகாரத்தையும் இணையதளம் அளிக்கிறதா என்ற வினாவுடன் இந்த தொடரை நாங்கள் முடிக்கிறோம். உலகின் 7-வது பிரபல வலைத்தளமாக விக்கிபீடியா உள்ளது. ஆனால், அதன் பதிப்பாசிரியர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் தான் பெண்கள் உள்ளனர்.

மேலும், விக்கிபீடியா வலைத்தளத்தில் உள்ள குறிப்பிடத்தக்க சுயவிவரங்களில் 15 சதவீதம் தான் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களை ஊக்குவிக்க, நாங்கள் விக்கிபீடியாவுடன் இணைந்து எடிட்-எ-தான் என்ற 12 மணி நேர எடிட்டிங் மற்றும் திருத்தும் வாய்ப்பினை வழங்குகிறோம். பெண்கள் குறித்த கட்டுரைகள் மற்றும் சுயவிவரங்களை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

வரும் டிசம்பர் 8-ஆம் தேதியன்று எங்கள் இணையதளத்தில் சேர்ந்து, நீங்கள் பங்களிப்பு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம். #100womenwiki ஹேஸ்டேக்கில் இணைந்து எவ்வாறு கட்டுரைகள் எடிட் செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பின் உங்களின் பங்களிப்பும் சேரட்டும்.

தொடர்புடைய தலைப்புகள்