கான்பூர் ரயில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்

உத்தர பிரதேசத்தில் தடம்புரண்ட ரயிலின் மிகவும் மோசமாக சேதமடைந்த பெட்டிகளின் உள்ளே சென்று பார்க்கும் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

இந்த பாட்னா-இந்தூர் விரைவு ரயில், கான்பூருக்கு அருகே தடம்புரண்டதில் இதுவரை 120-க்கு மேலானானோர் உயிரிழந்துள்ளனர்.

முறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் உடைந்த ரயில் பாகங்களில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி இரவு முழுதும் நடைபெற்றுள்ளது.

இது பற்றி கூடுதலாக அறிய கீழுள்ள செய்திகளில் கிளிக் செய்யவும்

நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து (காணொளி)

கான்பூர் ரெயில் விபத்துக் காட்சிகள் (புகைப்படங்களில்)

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் மேற்பார்வையில் மீட்புதவி மற்றும் விவாரண உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தில் இருந்த விரிசல் ரயிலை தடம்புரள செய்திருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க கீழுள்ள செய்திகளில் கிளிக் செய்யவும்

கான்பூர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு

கான்பூர் அருகே ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி

தொடர்புடைய தலைப்புகள்