திமுகவின் தலைவர் ஸ்டாலினா? கருணாநிதியா? :விஜயகாந்த் கடும் தாக்கு

  • 21 நவம்பர் 2016

திமுகவில் மூத்த தலைவர்கள் அனைவரையும் மு.க. ஸ்டாலின் ஓரம்கட்டியிருப்பதாகவும், தனக்கு பலம் சேர்க்க மாற்றுக் கட்சியினரை ஆசை வார்த்தைகள் கூறி கட்சியில் சேர்த்துவருவதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Image caption ”ஆசை வார்த்தை காட்டி கட்சியிலிருந்து இழுக்கிறார்கள்”

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு அவருடைய மகன்கள், மகள் தான் தலைவராக முடியும் என வியூகம் வகுக்கப்படுவதால், அது ஜனநாயகக் கட்சியா என விஜயகாந்த் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தனக்கு தொண்டர்கள் செல்வாக்கு இல்லாததால், மாற்றுக் கட்சியின் தொண்டர்களை அழைத்து அவர்களை முதன்மை இடத்தில் வைத்திருப்பேன் என மு.க. ஸ்டாலின் ஆசை வார்த்தைகளைக் கூறி கட்சியில் சேர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

திமுகவின் தலைவர் போல ஸ்டாலின் நடந்துகொள்வதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினா, மு. கருணாநிதியா என்றும் விஜயகாந்த் கேட்டிருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியையும் விஜயகாந்த் கடுமையாக குறை கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்