நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: நாராயணசாமி வெற்றி

புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், புதுவையின் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றி

கடந்த 19-ஆம் தேதியன்று நெல்லித்தோப்பு தொகுதிக்கும், தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

இதன்படி, இன்று காலையில் துவங்கிய வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே நாராயணசாமி முன்னிலை பெற்றிருந்தார்.

நாராயணசாமி 18, 709 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளரான ஓம்.சக்தி சேகர் 7,565 வாக்குககளை மட்டுமே பெற்றுள்ளார். இதனால், 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கடந்த செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்தார்.

தொடர்புடைய தலைப்புகள்