தஞ்சை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி

தஞ்சாவூர் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம். ரெங்கசாமி 101362 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

Image caption தஞ்சை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, 74488 வாக்குகளைப் பெற்றி தோல்வியடைந்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம்.எஸ். ராமலிங்கம் 3806 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

2295 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையெனக் கூறியுள்ளனர். தேமுதிக வேட்பாளர் அப்துல்லா சேட் 1534 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான குஞ்சிதபாதம் 794 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நல்லதுரை, 1192 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல் பதவியேற்பதற்கு முன்பாக மரணமடைந்ததால், அந்தத் தொகுதி காலியானது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய கடந்த நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தொடர்புடைய தலைப்புகள்