மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது: ஜெயலலிதா

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, "மருத்துவமனையில் உடல்நலம் தேறிவரும் தனக்கு இந்த வெற்றி எல்லையில்லாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக" கூறியிருக்கிறார்.

இதன் மூலம் மக்கள் தன் பக்கம்தான் என நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வும் தன் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்தவர்களுக்கும் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி என்றும் ஜெயலலிதா தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தத் தேர்தல் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், "அராஜகங்களையும், பண விநியோகத்தையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதபோதும் திராவிட முன்னேற்ற கழகம் இவ்வளவு வாக்குகள் வாங்கியிருப்பது தெளிவாக எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது. திராவிட முன்னேற்ற கழகத்தைப் பொறுத்த வரையில் இந்த தோல்வி பற்றி கவலைப்படாமல் நிச்சயமாக மக்கள் பணியை, ஜனநாயக பணியை தொடர்ந்து ஆற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கூறியிருக்கிறார்.

"தேர்தல் ஆணையத்தை துணைக்கு வைத்துக் கொண்டு பண வினியோகம் நடத்திய இரு கட்சிகளில், அதிக பணம் கொடுத்த அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு பதிலாக பணநாயகம் வெற்றி பெறுவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்