பாலமுரளி கிருஷ்ணா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞரும், இசை வல்லுநருமான, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.

பக்தப் பிரகலாதா என்ற தெலுங்குப் படத்தில் பாலமுரளிகிருஷ்ணா முதலில் நடித்தார். தமிழ்த் திரைப்படங்களில் அவர் பல பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

திருவிளையாடல் படத்தில் அவர் பாடிய 'ஒரு நாள் போதுமா' பாடல் மிகப் புகழ் பெற்றது. கலைக்கோயில் படத்தில் சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய 'தங்கரதம் வந்தது வீதியிலே', நூல் வேலி படத்தில் அவரது 'மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே', கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' போன்ற பாடல்கள் பெரிய அளவில் 'ஹிட்' ஆகின.

தொடர்புடைய தலைப்புகள்