ஜம்மு பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல்

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் ஜம்மு பகுதியில் செவ்வாய் அன்று அதிகாலை நேரத்தில், பலத்த ஆயுதமேந்திய தற்கொலைப் படையினரைக் கொண்ட ஒரு குழு, இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என அதிகாரிகளும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்கொலைப் படையினர் மற்றும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சூடு நடக்கிறது என ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

'' செவ்வாய் அன்று காலையில், மூன்று அல்லது நான்கு நபர்கள் கொண்ட பலத்த ஆயுதந்தாங்கிய தற்கொலைப் படையினரைக் கொண்ட ஒரு குழு, ஜம்முவின் நக்ரோடா பகுதியில், இந்திய ராணுவத்தின் 166வது தளம் படைப்பிரிவின் முகாமைத் தாக்கியது, '' என போலிசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்குக்கு பதில் நடவடிக்கைளுக்கான திட்டங்கள் மற்றும் அவற்றை மேற்கொள்ளுவது மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் மிக பெரிய ராணுவ வலையமைப்பின் இந்திய ராணுவத்தின் 16 கார்ப் தலைமையகம், நக்ரோடா பகுதியில் உள்ளது.

தற்போது நடக்கும் துப்பாக்கிச் சூட்டில், ஒரு இள நிலை அதிகாரி உட்பட இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் நெடுஞ்சாலையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மற்றும் அங்கு போக்குவரத்து இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து நக்ரோடா பகுதியில் உள்ள பள்ளிகளை மூடுமாறு துணை ஆணையர் சிம்ரன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.