`விலங்குப் பண்ணை` நாவலைக் குழப்பிய ஷில்பா ஷெட்டி ட்விட்டரில் கேலிக்குள்ளானார்

பாலிவுட் நடிகை சில்பா ஷெட்டி, 1945ல் வெளிவந்த ஆங்கில எழுத்தாளரின் ஜார்ஜ் ஆர்வெலின் 'அனிமல் பார்ம்'' (Animal Farm) என்ற புத்தகம் விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க உதவும் என்று எழுதியுள்ளதை அடுத்து அவர் இந்திய சமூக வலைத்தளங்களில் கேலி விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜார்ஜ் ஆர்வெலின் 'அனிமல் பார்ம்'' நாவல் (dystopian allegory) ஸ்டாலினியத்தின் எழுச்சியை குறித்த ஒரு அவலப்பார்வை கொண்ட நாவல்.

அந்த நாவலில் விலங்குகள் செய்யும் புரட்சியானது , ஊழல் மிகுந்த உயர்வர்க்க எழுச்சியில் முடிகிறது.

ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பலர் #ShilpaShettyReviews என்ற ஹேஷ்டேக்கில், இது போன்ற விலங்கு மற்றும் பிற தலைப்புகள் கொண்ட புத்தகங்களின் தலைப்பை வைத்து அவற்றின் கருத்துக்களை கிண்டலாக யூகித்து பதிவிட்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை TWITTER / @A_BIT_TOO_MUCH

`ஹாரிபாட்டர்` புத்தகம் தேசிய அளவில் பள்ளிக்கூட பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, அவர் இந்த புத்தகம் மட்டுமல்லாது அதில் சேர்க்கப்பட வேண்டியதாகத் தான் கருதும் மற்ற புத்தகங்களையும் அவர் பரிந்துரை செய்தார்.

''லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் ஹாரிபாட்டர் போன்ற புதினங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, குழந்தைகளின் இளம் வயதில் கற்பனை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் என எண்ணுகிறேன்,'' என டைம்ஸ் ஆ ஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'' லிட்டில் உமன் (Little Women) போன்ற புத்தகங்கள், பெண்களுக்கு மதிப்பளிப்பதை இளம் வயதில் ஊக்குவிக்கும்,''என்றார் ஷில்பா.

படத்தின் காப்புரிமை TWITTER / @RCCSHASHANK

''அனிமல் பார்ம் (Animal Farm) என்ற புத்தகமும் பாடத்திட்டத்தில் வைக்கப்படவேண்டும். இந்த புத்தகம் விலங்குகளிடம் எவ்வாறு அன்போடு நடந்துகொள்ளவது, விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது போன்றவைகளைக் கற்றுக்கொடுக்கும்,'' என்றார் அவர்.

பரவலாக சமூக வலைத்தளங்களில் இந்த கருத்துக்கள் பேசப்பட்ட பிறகு, ஷில்பா ஷெட்டியின் மேற்கோள் காட்டப்பட்ட செய்தியில் அந்த பகுதி இணையதளத்தில் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் ஏற்கெனவே அச்சு பிரதியில் வெளியாகியுள்ள பகுதியை படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை TWITTER / @VIVEKISMS

இந்தியாவில் தேசிய அளவில் பிரபலமான நபராக உள்ள ஷில்பா ஷெட்டி, செலிபிரிட்டி பிக் பிரதர் (Celebrity Big Brother) என்ற பிரிட்டிஷ் தொடரில் தோன்றி, வெற்றி பெற்றதால், அவர் பிரிட்டனிலும் அறியப்படும் நபராக உள்ளார்.

பிக் பிரதர்(Big Brother) என்ற தொலைக்காட்சி தொடருக்கு சூட்டப்பட்ட பெயர்,1984ல் ஜார்ஜ் ஆர்வெலின் மற்றொரு நாவலான, 1984 என்ற புத்தகத்தில் வரும் ஒரு சர்வாதிகாரப் போக்கு கொண்ட தேசிய தலைவர் ஒருவரை தழுவி வைக்கப்பட்ட பெயர் ஆகும்.

படத்தின் காப்புரிமை TWITTER / @MAHRUKH_BUTTA
படத்தின் காப்புரிமை TWITTER / @SWATYAGI

சமூக ஊடங்கங்களில் தனது கருத்துக்கள் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு அவர் வெளியிட்ட இந்தக் கருத்துக்கள் பற்றி ஷில்பா ஷெட்டி இது வரை எந்த பதிலும் கூறவில்லை.