காங்கிரஸ், ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்குகள் சட்ட விரோதமாக ஊடுருவல்

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்குகள் சட்ட விரோதமாக ஊடுறுவப்பட்டுள்ள.

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு

பட மூலாதாரம், @OfficeOfRG

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கில் தன்னை "வெறுப்பவர்களை" நோக்கி கூறுவது போல் ஒரு டிவிட் செய்யப்பட்டுள்ளது; மேலும் அது அதிகாரபூர்வ காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கால் மறு டிவீட் செய்யப்பட்டுள்ளது.

பல அவதூறான டிவீட்டுகள் இரு டிவிட்டர் கணக்குகளில் இருந்து அழிக்கப்பட்ட பிறகு அந்த புதிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊடுருவல் இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த மோசமான நிலையின் பிரதிப்பலிப்பாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை பயன்படுத்தி இணைய வழி பணப்பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்துவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஊழலை தடுக்கும் நோக்கத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ததற்கு பிறகு அதற்கு மாற்று வழியாக இணைய வழி பரிவர்த்தனைகளை நாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

சட்ட விரோத ஊடுருவல் குறித்து டெல்லி போலிஸாரின் சைபர் பிரிவில் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளதால், இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து டிவிட்டர் நிறுவனத்திடம் விசாரித்து வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த ஊடுருவல் குறித்து மக்கள் சமூக ஊடகத்தில் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், @sirjadeja

பட மூலாதாரம், @bhupendrachaube