அமெரிக்க சுற்றுலா பெண் மீது பாலியல் தாக்குதல்: இந்திய போலிஸ் புலனாய்வு

டெல்லியிலுள்ள முன்னிலை ஹோட்டல் ஒன்றில் இவ்வாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பெண்ணொருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய காவல்துறை புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/AFP/Getty Images
Image caption குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்னால் கொண்டு வர இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வலியுறுத்தல்

இது தொடர்பான குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்னால் கொண்டு வர இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வலியுறுத்தியிருக்கிறார்.

உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி, மயக்கம் தரக்கூடிய பானத்தை ஹோட்டல் அறையில் வைத்து கொடுத்ததாகவும், பின்னர் நான்கு சகாக்களோடு கூட்டாக பாலியல் வல்லுறுவுக்கு அவரை உட்படுத்தியதாகவும் இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இந்த பெண் புகார் அளித்திருக்கிறார்.

சுற்றுலா பயணிகள் மீதான மிக சமீபத்திய பாலியல் வல்லுறுவு தாக்குதல் இதுவாகும்.

நாடு திரும்பிய பின்னர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால்தான் இந்த பாலியல் தாக்குதல் பற்றி மிகவும் தாமதமாக புகார் அளிப்பதற்கான காரணமென தெரிவித்திருக்கும் இந்த பெண், இது பற்றி தன்னுடைய குடும்பத்தினரிடமும் தொடக்கத்தில் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.