ஜெயலலிதா உடல்நிலை: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, மும்பையிலிருந்து புறப்பட்டு தமிழகம் திரும்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இச்சூழலில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி குறித்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @RashtrapatiBhvn

மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமிழக காவல் துறை தலைவரிடம் பேசியுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் குறித்த மற்ற பிற செய்திகளை தெரிந்து கொள்ள

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு

'பிசியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்'

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது: ஜெயலலிதா

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா

பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா அறிக்கை

தொடர்புடைய தலைப்புகள்