ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம்: அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு

  • 5 டிசம்பர் 2016
படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அப்போலோ செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டியும் தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு ஆதரவு துணையுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறையாகும்.

காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதாவுக்கு அவசர சிகிச்சை: டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை அப்போலோ நிலவரம்

மேலும் செய்திகளுக்கு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர் குழு

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம்

ஜெயலலிதா நலம் பெற தொண்டர்களின் தொடர் பிரார்த்தனை (புகைப்படத் தொகுப்பு)

ஜெயலலிதா உடல்நலம் : கால அட்டவணை

காவல் துறையினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப தமிழக டிஜிபி உத்தரவு.

தொடர்புடைய தலைப்புகள்