சற்று நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம்

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக சென்னை வந்து கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை வளாகத்திலேயே அந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சென்னையிலேயே தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் உத்தரவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்தால்தான் குறைந்த கால அவகாசத்தில் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதால் எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்